எஸ்.பி.பி ரிட்டர்ன்ஸ்! கார்த்தி படத்தில் பாடல் பாடினார்!

  திஷா   | Last Modified : 31 Oct, 2018 06:06 pm
spb-sings-in-karthi-s-dev

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'தேவ்'. இதனை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்திற்கு பிறகு இந்தத் திரைப்படத்திலும் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் இதனை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் கார்த்திகாக ஒரு பாடலை பாடியிருக்கிறார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இன்று அதன் ரெக்கார்டிங் நடந்துள்ளது. அப்போது கார்த்தி உள்ளிட்ட குழுவினருடன் எஸ்.பி.பி எடுத்துக் கொண்ட படம் தற்போது வைரலாகி வருகிறது. 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close