#MeToo பகீர்... இயக்குநர் கரு.பழனியப்பனை அழைத்த நடிகை சோனா..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Nov, 2018 12:41 pm
metoo-actress-sona-call-director-karu-palaniyappan-shocking

சர்ச்சைகளுக்கு சற்றும் பஞ்சமில்லாதவர் கவர்ச்சி நடிகை சோனா. மீ டூ வரும் முன்பே தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக அதிர்ச்சி அணுகுண்டை வீசியவர். ஆண்கள் டிஷ்யூ பேப்பரைப் போல... தேவைகள் நிறைவேறியபின் தூக்கி எறிந்துவிட வேண்டும்' என ஒருமுறை இவர் பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. ஆண்கள் சங்கம் சார்பில் சோனாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

பிறகு சிறிது நாட்கள் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தார். கடவுள் மீது கொண்ட பற்றால் தனது பெயரை தேவி சோனா என மாற்றிக் கொண்டார். மீண்டும் சில படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார்.  மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கவர்ச்சிக்கும், சர்ச்சைகளுக்கும் பெயர்போன சோனா, மாறாக திரையுலகினரிடையே நற்பெயரை எடுத்து வருகிறார்.

ராஜாவுக்கு ராஜா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், ‘’இந்த விழாவுக்கு என்னை நடிகை சோனா தான் அழைத்தார். அவர் நான்காண்டுகளுக்குப் பின் இதற்காகப் போன் செய்து அழைத்தார். படத்தின் இயக்குநர் எப்படியாவது கரு.பழனியப்பனை அழைத்து வர வேண்டும் என்று  ஆசைப்பட்டதாகக் கூறினார். இப்போதெல்லாம் பிரச்சினைகளை ஆடியோ விழாவில்தான் பேசவேண்டியுள்ளது. இன்று மீடூ பற்றிப் பேசுகிறார்கள். இவர்கள் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? ராஜலட்சுமிக்கு நேர்ந்த அந்தக் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? மீடூ என்பது இரண்டு பணக்காரர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதை அவர்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். மீடியாக்கள் இவ்வளவு மீடூ பற்றிப் பேசுகிறார்கள்.

எந்த மீடியாவாவது ஒடுக்கப்பட்டவர்களுக்கு, எளிய மக்களுக்கு இப்படி எங்கு பார்த்தாலும் நடக்கும் கொடுமை பற்றிப் பேசுவதுண்டா? அதை சாதாரணமாக கடந்து போகும் ஒன்றாகத்தான் பார்க்கிறார்கள்’எனக் கவலைப்பட்டார். இயக்குநர் பேரரசு பேசியபோது, ’’சினிமாவை பொழுது போக்கு என்று பார்த்த காலம் போய் இன்று சினிமாக்காரர்களின் வாழ்க்கை மக்களுக்குப் பொழுதுபோக்காகி விட்டது. மீ டூ விஷயத்தில் எது பொய் ? எது உண்மை? என்பதே தெரியவில்லை. சினிமாவில் எத்தனையோ சங்கங்கள் இருக்கின்றன.

அவை எத்தனையோ பிரச்சினைகளைத் தீர்த்துள்ளன. மீடூவால் பிரச்சினை தீராது. சங்கம்தான் தீர்வைத் தேடித் தரும். பிரச்சினை இருந்தால் சங்கத்தை அணுகலாம். அதை விட்டு விட்டு நமக்கு நாமே சினிமாவைக் கேவலப்படுத்தக் கூடாது. சினிமாவை சினிமாக்காரர்களே களங்கப்படுத்தக் கூடாது’’ என வேண்டுகோள் விடுத்தார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close