நாளை முதல் சர்கார் புக்கிங் தொடக்கம்!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 08:50 am
sarkar-bookings-from-friday

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை முதல் தொடங்குகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தின் கதை வேறொருவருடையது என்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நியைில், அது சமரசத்தில் முடிந்தது. இந்நிலையில் சர்கார் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக உயர்ந்துள்ளது. 

 

 

இந்நிலையில் படத்திற்கான டிக்கெட் விற்பனை தமிழகத்தில் நாளை தொடங்கும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close