நவீன் படத்தில் விஜய்யுடன் இணையும் அருண் விஜய்!

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 11:10 am

alaudin-arputha-camera-is-ready-for-release

மூடர்கூடம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பலரின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் நவீன். பிளாக் ஹ்யூமர் களத்தில் உருவாகியிருந்த அந்தத் திரைப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. 

இந்நிலையில், 5 வருடங்கள் கழித்து தனது 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார் நவீன். அலாவுதீனின் அற்புத கேமரா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் அவரே நடிக்கவும் செய்திருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் பிக்பாக்கெட் திருடனாக நடித்திருக்கிறார் நவீன். இதில் ஆனந்தி ஹீரோயினாக நடித்திருக்கிறார். 

தற்போது இதன் படபிடிப்பு முழுவதும் முடிந்து ரிலீஸுக்கு காத்திருப்பதாகவும், இதன் டீசர் விரைவில் வெளியாகும் என்றும் ட்விட்டரில் அறிவித்திருக்கிறார் நவீன். 

தவிர அவரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் படபிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.  

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடிப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, நடிகர் அருண் விஜய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் அவர் இன்னொரு ஹீரோவா அல்லது, வில்லனா எனத் தெரியவில்லை. இவர்களுடன் பிரகாஷ்ராஜ் மற்றும் ஜெகபதிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இதன் டைட்டில் இன்று மாலை வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நவீன்.  
newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close