பாட்டியாக நடிக்கும் சமந்தா!

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 11:39 am
samantha-s-next-movie

சமந்தா நடிப்பில் சமீபத்தில் யூ டர்ன் திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். தவிர, நாக சைத்தன்யாவுடன் இணைந்து, ஒரு தெலுங்குப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இந்நிலையில் தற்போது இவரின் அடுத்தப் படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. 'மிஸ் கிரான்னி' என்ற கொரிய படத்தின் ரீமேக்காக அது உருவாகிறதாம். போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் 7௦ வயது பாட்டி ஒருவர் போட்டோ எடுத்ததும் அவர் 20 வயது பெண்ணின் உடலுக்கு வந்து விடுவது தாம் மிஸ் கிரானி படத்தில் மையக்கரு.

அந்த பாட்டியின் 20 வயது கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். 70 வயது பாட்டியாக வேறொரு பழம்பெரும் நடிகை நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 
newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close