நடிகையின் மேல் மற்றொரு நடிகை மீடூ புகார்

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 12:51 pm
young-actress-accuses-another-actress-of-sexually-abusing-her

தமிழகத்தில் சூடு பிடித்து வந்த மீ டூ விவகாரம் தற்போது சற்று தணிந்துள்ளது. இதில் முக்கியமாக சின்மயி - வைரமுத்து விவகாரம் பெரியளவில் பேசப்பட்டது. சினிமா பிரபலங்கள் உட்பட ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் குறுஞ்செய்திகளை சின்மயி அவரது, ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். 

இந்நிலையில் நடிகை மாயா என்பவர் மீது, மாடலிங் துறையைச் சேர்ந்த அனன்யா ராம்பிரசாத் என்பவர், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பகீர் கிளப்பியுள்ளார். 

"2016-ல் தனக்கு 18 வயதில் அறிமுகமான மாயா, தன்னை முழுவதும் அவரது கன்ட்ரோலில் கொண்டு வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட அனன்யா அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

என்னுடன் மட்டும் தான் பழக வேண்டும், நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என, என் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளையும் மாயாவே எடுக்கத் தொடங்கினார். 

மாயா தனியாக வசித்து வந்தார், வேலைக்காரணமாக அவர் வீட்டில் நான் தங்க நேர்ந்த சமயத்தில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்" என மிக நீண்ட பதிவாக முகநூலில் பதிவிட்டிருக்கிறார் அனன்யா. 

அனன்யாவின் இந்த புகாரை மறுத்திருக்கிறார் மாயா. தனுஷின் தொடரி, ஜோதிகாவுடன் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், விக்ரமுடன் துருவநட்சத்திரம்,  ரஜினிகாந்துடன் 2.0 ஆகிய திரைப்படங்களில் மாயா எஸ் கிருஷ்ணன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close