96 கதை திருடப்பட்டதா?- இயக்குநர் பிரேம்குமார் விளக்கம்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 01:37 pm
director-premkumar-explains-about-96-stroy-issue

96 படத்தின் கதை தன்னுடையது தான் என்று கூறிவரும் பாரதிராஜாவின் துணை இயக்குநர் சுரேஷ் கூறி வந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அந்த திரைப்படத்தின் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தற்போது 50 கோடி வசூலைத்தாண்டி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 

இந்நிலையில் 96 திரைப்படத்தின் கதை என்னுடையது என்று சுரேஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு குற்றசாட்டு கூறினார். இதில் 96 திரைப்படத்தின் கதை தன்னுடைய என்றம் பாரதிராஜா இயக்க இருந்த பால்பாண்டி என்கிற பாரதி என்ற படத்தின் கதை என சுரேஷ் கூறினார். 

இதுகுறித்து பேசிய பாரதிராஜா, "இயக்குநர் மருதுபாண்டியிடம் சுரேஷ் இந்த கதையை கூறியிருக்கிறார். பிறகு ஒரு நாள் பிரேம் குமார் மூலம் விஜய் சேதுபதியிடம் பேசலாம் என அவர் கூறியிருக்கிறார், ஆனால் அந்த சந்திப்பு நடக்கவேயில்லை. இதற்கிடையே 96 படத்தின் டைட்டிலில் 'நன்றி மருது பாண்டியன்' எனக் குறிப்பிட்டிருப்பது எங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் படத்திலும் நடித்திருக்கிறார். 

நான் இது தொடர்பாக மருது பாண்டியிடம் கேட்டப்போது, அந்த கதையையே நான் மறந்துவிட்டேன் என்று கூறினார். அவருக்கு படத்தின் நன்றி என கிரெடிட் கொடுத்திருக்கிறார்கள். எப்படி கதையை மறக்க முடியும்" என்று கூறியிருந்தார்.

சர்கார் படப்பிரச்னை சமீபத்தில் தான் முடிவடைந்துள்ளது. தொடர்ந்து 96 விவகாரம் எழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பிரேம்குமார் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அதில், "இந்த படம் வெளியானது முதலே படத்தின் கதை குறித்து சர்ச்சைகள் வரத்தொடங்கின. தற்போது படம் வெற்றியான பிறகு இது பெரிதாகி உள்ளது. என்னால் என் படத்தின் வெற்றியை கொண்டாட முடியவில்லை.

சுரேஷ் கூறி வரும் குற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இந்த கதை தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன. பாரதிராஜா கொச்சையான வார்த்தைகளால் சமூக வலைதளங்களில் என்னை திட்டியிருக்கிறார். அவர்கள் கையில் எந்தவித ஆதாரமும் இல்லை. இப்படி இருக்கையில் என்னை திட்டியது மிகவும் தவறான ஒன்று. இதற்கு அவர் பதில் அளிததாக வேண்டும்.     

சுரேஷ் அளித்திருக்கும் பேட்டியில் படத்தின் இடைவேளை அவர் யோசித்தது போலவே இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நாங்கள் பதிவு செய்திருந்த ஒரிஜினல் ஸ்கிரிப்டில் வேறு ஒரு இடைவேளையை தான் நாங்கள் வைப்பதாக இருந்தோம். அப்படி இருக்கையில் அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

மேலும் நேரம் காரணமாக தான் இப்போது படத்தில் இருக்கும் இடைவேளை சீனை தேர்வு செய்தோம். ஆனால் இது ஒன்றும் பெரிய காவிய சீன் இல்லை. பாரதிராஜாவிடம் கதை கூறும் போது இடைவேளை சீனை கேட்டு அவர் தன்னை கட்டியணைத்ததாக சுரேஷ் கூறியிருக்கிறார். அந்த சீனுக்கேவே பாரதிராஜா கட்டியணைத்தார்? 

நாயகி ஜானகி ரசிகையாக இருப்பதும் அவர் யோசித்து வைத்தது தான் என்கிறார். இதே போல ஓரு படத்தில் கெளசல்யா சுசிலா ரசிகையாக இருப்பது போன்று கதை வரும். எனவே இது சாதாரணமாக அனைவருக்கும் தோன்றியிருக்க கூடிய யோசனை தான்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close