முடிவுக்கு வந்த விஷால்- வரலட்சுமி காதல்... முறிவுக்கு பின்னணியில் சரத்குமார்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Nov, 2018 01:54 pm
vishal-varalakshmi-love-split-sarath-kumar-s-background

நடிகர், தயாரிப்பாளர், நடிகர் சங்க செயலாளர், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர் விஷால். 8 வயது முதல் நட்புடன் பழகி வந்த வரலட்சுமியுடன் காதலில் விழுந்தார். 

நாடி, நரம்பு, உயிர், அவர் இல்லாமல் நானில்லை. என் மனதுக்கு நெருக்கமானவர், வரலட்சுமி தனது வாழ்வின் வரம், பொக்கிஷம் என்று வரலட்சுமியைப் பற்றிக் கேட்டால் உருகி மறுகுவார் விஷால். இருவரும் நெருக்கமாக வெளியில் சுற்றுவதையும், விஷால் மறுகுவதையும் பார்த்து அவர்கள் காதலிப்பது உண்மை என நம்பியது திரையுலகம். ஆனால், நான் விஷாலைக் காதலிக்கவில்லை என வெளிப்படையாகவே கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார் வரலட்சுமி. 

இந்தப் பிரிவுக்கு காரணம் சரத் குமார் என்கிறார்கள். பின்னணியில் என்ன நடந்தது? தயாரிப்பாளரான விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி. சரத்குமாரை வைத்து மகாபிரபு, ஐ லவ் இந்தியா என்ற படங்களை தயாரிதவர். 86ல் இருந்து தயாரிப்பாளராக இருக்கிறார். சரத்குமார், சினிமாவில் நடிப்பதற்கு முன்பே பெங்களூருவில் கல்லூரியில் ஒன்றாகப் படித்து ஒரே நேரத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்தவர்கள். அதன் பிறகு சரத் குமார் பாடி பில்டராகி விட்டார். ஜி.கே.ரெட்டி வேறு பணியை தொடர்ந்து இருக்கிறார். இருப்பினும் நட்பு தொடர்ந்துள்ளது. 
அதன் பிறகு சரத் குமார் சென்னைக்கு வந்து நடிகரான பிறகு நண்பர் என்கிற முறையில் மாகபிரபு, ஐ லவ் இந்தியா என சரத் குமார் நடித்த இரண்டு படங்களை தயாரித்தார் ஜி.கே.ரெட்டி.

                                                                                                      ஜி.கே.ரெட்டி

அதன் பிறகு ரகசிய போலீஸ் படத்தை பெரும் பொருட்செலவில் ஏ.என்.சுதர்சன் என்பவர் பெயரில் சரத்குமாரே அந்தப் படத்தைத் தயாரித்தார். ஆனால், உண்மையில் முதலீடு செய்தது விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி. எம்.ஜி.ஆர் நடித்த ரகசிய போலீஸ் 115 என்கிற டைட்டிலில், அப்போதே லட்சுமிகாந்த் பியாரிலால் என்கிற இந்தி இசையமைப்பாளரை அழைத்து வந்து பிரம்மாண்டம் காட்டினார் சரத்குமார். அப்போதைய நிலையில் பெரும்பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் அது. ஆனால், படம் பெரும் தோல்வி. ஜி.கே.ரெட்டிக்கு பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார் சரத்குமார். மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டு வெறும் கையை பிசைந்து கொண்டிருந்தார் ஜி.கே.ரெட்டி. ரகசிய போலீஸ் படத்தில் நடித்த நக்மாவோடு ஏற்பட்ட நெருக்கத்தால் சரத் குமார் தனது மனைவியான சாயாதேவியையும், மகள்களான வரலட்சுமி- பூஜா ஆகிய இரு மகள்களையும் பிரிந்தார். 

அப்போதே விஷாலும், வரலட்சுமியும் இளம் வயது நண்பர்களாக இருந்தனர். குடும்பத்தையும், பிரிந்து, நட்பு என்கிற பெயரில் பணத்தையும் திரும்பக் கொடுக்காமலிருந்த சரத்குமார் மீது ஜி.கே.ரெட்டியும், சாயாதேவியும் கடும் கோபத்தில் இருந்தனர். பல கால நட்பால் ஜி.கே.ரெட்டி, சகோதரியாக பாவித்து வந்த சாயாதேவிக்கும் அவரது மகள்களுக்கும் ஆதரவாக இருந்து வந்துள்ளார்.  அதன் பிறகு ஜி.கே.ரெட்டியால் மீண்டு வந்து படம் தயாரிக்க இயலவில்லை. இடைப்பட்ட காலத்தில் பால்ய நண்பர்களாக இருந்த விஷாலும், வரலட்சுமியும் காதலில் விழுந்தனர். பல ஆண்டுகளாக அவர்களது காதலும் தொடர, விஷாலும் சினிமாவில் முக்கியமான இடத்துக்கு முன்னேறி வந்தார். 

சரத்குமாரால்தான், தனது குடும்பம் பல ஆண்டுகளாக சிரமத்திற்கு ஆளானதாக கோபம் விஷாலை மனதில் பதியம் போட்டுக்கொண்டே இருந்தது. இளம் வயதில் தாயையும், தங்களையும் தவிக்க விட்டுப் போனது வரலட்சுக்கும் தந்தை மீதான கோபத்தை அதிகப்படுத்தியது. நக்மாவை பிரிந்த பிறகும் முதல் மனைவி சாயாதேவியுடன் இணையாமல், நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டது சரத் குமார் மீது வரலட்சுமிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  

இந்த நிலையில், இளம் வயதில் நடந்த துரோகங்களை மனதில் வைத்தே நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு சரத்குமாரை எதிர்த்துப் போட்டியிட்டார் விஷால். நடிகர் சங்கத் தேர்தலின் ஆரம்ப காலத்தில்  விஷாலுக்கு ஆதரவாகவே இருந்து வந்தார் வரலட்சுமி. இன்னும் சொல்லப்போனால், விஷாலுக்கு இந்த ஐடியாவைக் கொடுத்ததே வரலட்சுமிதான் என்ற பேச்சுக்களும் உண்டு. நடிகர் சங்கத் தேர்தல் களம் பரபரத்தபோது சிறு மன ஸ்தாபம் ஏற்பட, அப்பாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார் வரலட்சுமி. விஷாலை பற்றிய தகவல்களை திரித்துக் கூறி அவருக்கு எதிராக வரலட்சுமியின் மனதை  சரத்குமார் மாற்றியதாக கூறப்பட்டது. அப்போதே இருவரது காதலும் முறிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. 

நடிகர் சங்க செயலாளராக விஷால் வெற்றிபெற்ற பிறகு திருமணம் குறித்து பேசிய விஷால், ‘வரலட்சுமியும் நானும் சிறு வயது முதலே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். இப்போதே  கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்து விட்டேன்’ எனக் கூறியிருந்தார். இதன் மூலம் விஷால் -வரலட்சுமி திருமணம் உறுதி என நம்பப்பட்டது. அதன்பின்னும் சரத்-விஷால் மோதல் தீர்ந்தபாடில்லை. நடிகர் சங்க பணத்தில் ரூ.3 கோடி வரை சரத்குமார் மோசடி செய்ததாக குற்றம் சாட்டிய விஷால், அவரை நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து சமீபத்தில் தூக்கினார். நீதிமன்றத்திலும் அவர் மீது புகார் கொடுத்தார். இதற்கு முன் தனது காதலர் விஷால், தனது தந்தையிடம் மோதிய போதெல்லாம் வரலட்சுமி பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால், நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியதால் விஷால் மீது வரலட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டு விட்டது. 

தன்னுடைய திருமணம், தனது தந்தை சரத்குமார் ஆசிர்வாதத்துடன் நடக்க வேண்டும் என்று விரும்பிய வரலட்சுமி “ என் தந்தையுடனான உன் உறவை சரி செய்.. பிறகு திருமணம் பற்றி பேசலாம்” என்று விஷாலிடம் கூறி விட்டாராம். இடையில் வரலட்சுமி தனது ட்விட்டர் பதிவில் ‘’காதலர்கள் பிரிவது இதைவிட மோசமாக இருக்காது. ஒரு நபர் 7 ஆண்டுகால காதலை தன்னுடைய மேலாளரின் வழியாக முறித்துக் கொண்டுள்ளார். உண்மையான காதல் எங்கே போனது? எனப் பதிவிட்டு விஷாலுடனான காதலுக்கு விளக்கம் சொல்லி இருந்தார். 

ஆனாலும், அவ்வப்போது வரலட்சுமியுடனான காதல் குறித்து அவ்வப்போது வெளிப்படுத்தி வந்த விஷால், ’என் நாடி நரம்பு எல்லாமே வரலட்சுமிதான்’ எனக் கூறி வந்தார். ஆனால் வரலட்சுமி இதுகுறித்து வாய் திறக்கவில்லை. விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தும் வகையில் சண்டைக்கோழி-2 படத்தில் வரலட்சுமிக்கு வாய்ப்புக் கொடுத்து சமாதானத்துக்கு முயன்றார் இயக்குநர் லிங்குசாமி. இனியாவது ஒன்று கூடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், வரலட்சுமி என் மனதுக்கு நெருக்கமானவர். திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பேன்’ எனக் கூறியிருந்தார் விஷால்.

பல ஆண்டுகளாக விஷலுடன் காதல் பற்றி அமைதி காத்து வந்த வரலட்சுமி, ’’அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மையில்லை. விஷாலுக்கு, திருமணத்திற்கு பெண் பார்த்தால், நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கத் தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான்’’ என வெளிப்படையாக கூறி அவர்களது காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் வரலட்சுமி. விஷால்-வரலட்சுமியின் காதல் முறிவுக்கு காரணம், சரத்குமார்தான் என அடித்துக் கூறுகிறார்கள் தமிழ்த்திரையுலகினர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close