மாதவன் நடிக்கும் ராக்கெட்ரி படத்தின் டீசர்!

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 03:36 pm
madhavan-s-rocketry-teaser

கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ க்கு மாற்றப்பட்ட இவ்வழக்கில் இவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்தது. 

சமீபத்தில் நம்பி நாராயணனின் வழக்கு முடிவுக்கு வந்து, அதில் வெற்றி பெற்ற நம்பிக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப் பட்டது. 

ஜெயிலில் 50 நாட்கள் நம்பி இருந்தபோது, நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை மையமாக வைத்து இயக்குநர் ஆனந்த் மகாதேவன் ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் நம்பியின் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்துள்ளார். 

'ட்ரைகலர் ஃபிலிம்ஸ் – வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் – சஃப்ரோன் கணேஷா எண்டர்டெயின்மெண்ட்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இதன் டீசர் தற்போது வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. 

newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close