சுஜா வருணிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய கமல்!

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 03:47 pm
suja-varunee-invites-kamal-for-her-wedding

குடும்ப சூழ்நிலையின் காரணமாக 14 வயதில் சினிமாவில் நுழைந்த சுஜா வருணி, மக்களால் அடையாளம் காணப்பட்டது போன சீசனின் பிக்பாஸில் தான். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சுஜா வருணி தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் பெயர் சிவக்குமார் எனவும் தெரிவித்து இருந்தார். தன் திருமணத்தை கமல்ஹாசன் நடத்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

சிங்கக்குட்டி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சிவாஜியின் பேரன் தான் அந்த சிவக்குமார் என பின்னர் தெரிய வந்தது. 

இந்நிலையில், வரும் 19-ம் தேதி சுஜா - சிவக்குமார் திருமணம் நடக்கவிருக்கிறது. நிகழ்ச்சியில் சொன்னது போல, சுஜா வருணிக்கு தந்தை ஸ்தானத்தில் நின்று இத்திருமணத்தை நடத்தி வைக்கிறார் கமல். 

இதற்காக சமீபத்தில் அவரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைத்திருக்கிறார்கள் மணமக்கள்!

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close