கோவா ஃபிலிம் ஃபெஸ்டிவலில் கருணாநிதியின் பராசக்தி

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 04:08 pm
parasakthi-will-be-screened-in-goa-international-film-festival

கோவாவில் நடக்கும் சர்வதேச பட விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரின் 'பராசக்தி' திரைப்படம் திரையிடப்படுகிறது. 

1952-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இத்திரைப்படத்தை கிருஷ்ணன் - பஞ்சு இயக்கியிருந்தார். சிவாஜி கணேஷனின் முதல் படமான இது, ரசிகர்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பை அளித்தது. 

குறிப்பாக இதன் வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைய கால இளைஞர்களும் ரசிகர்களும் ரசிக்கும்படி இருக்கிறது. 

இந்நிலையில் 49-வது சர்வதேச பட விழா வரும் 20-ம் தேதி கோவாவில் தொடங்குகிறது. அரசியலைத் தவிர்த்து, கலைத்துறையில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்த கருணாநிதியின் கலை சேவையையை நினைவுக்கூறும் வகையில் அவரின் கதை வசனத்தில் வெளிவந்த பராசக்தி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close