டிசம்பரில் தொடங்கும் “இந்தியன்-2“ படபிடிப்பு!

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 04:54 pm
indian-2-update

இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல் கூட்டணியில் கடந்த 96-ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து, தற்போது இதன் 2-ம் பாகத்தின் வேலையில் இறங்கியுள்ளார் ஷங்கர். 

முதல் பாகத்தைப் போல் இரண்டாம் பாகத்திலும் கமலே ஹீரோவாக நடிக்கிறார். இதற்கிடையே ரஜினிகாந்தின் 2.0 படத்தின் ரிலீஸ் வேலைகளில் மும்முரமாகி விட்டார் ஷங்கர். 

இந்நிலையில் இந்தியன் 2-வைப் பற்றி பேசியிருக்கும் ஷங்கர்,"இந்தியன் போன்ற சாயலில் நான் ஏற்கனவே நிறைய படம் இயக்கிவிட்டேன். சில மற்ற இயக்குநர்களும் பண்ணி விட்டார்கள். அதனால், ‘இந்தியன் 2'-வை எப்படி இயக்க வேண்டும் என்பதை விட எப்படியெல்லாம் இயக்கக் கூடாது என்ற தெளிவைப் பெறவே மிகுந்த நாட்கள் ஆகிவிட்டன. பிறகு கதையின் ஃபைனல் காப்பியை கமல்ஹாசனிடம் சொன்னேன். நான் ரசித்து எழுதியை ஆர்வத்தோடு அவரும் கேட்டார். இறுதியாக இதன் படபிடிப்பை வரும் டிசம்பரில் துவங்க இருக்கிறோம்" என்றார்.

newstm.in 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close