வட சென்னை 2-ம் பாகத்தில் ஒரு ட்விஸ்ட்!

  திஷா   | Last Modified : 01 Nov, 2018 04:33 pm
a-big-change-of-plans-for-vada-chennai-sequels

இயக்குநர் வெற்றிமாறனின் ‘வடசென்னை’ சமீபத்தில் வெளியாகியது. இதில் ஹீரோவாக தனுஷ் நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதனை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது.

தொடர்ந்து இதன் 2 மற்றும் 3-ம் பாகம் வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி "ராஜன் வகையறா" என்ற வெப் சீரியலை இயக்குகிறாராம் வெற்றிமாறன். அமீரின் கதாபாத்திரமான ராஜனின் சிறுவயது முதல் படத்தில் காட்டப்பட்டது வரை, ஆழமாக எடுத்துச் சொல்லும் விதத்தில் இந்த சீரியல் இருக்குமாம். ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிசோர், டேனியல் பாலாஜி ஆகியோரும் இதில் இடம் பெறுகிறார்களாம். வட சென்னையில் கொஞ்ச நேரமே வந்தாலும் மிக அழுத்தமாக இருக்கும் ராஜன் எனும் அமீரின் கதாபாத்திரம். ஸோ, அவரின் கேரக்டரை இன்னும் ஆழப்படுத்தி வெப் சீரியலில் பதிவு செய்துவிட்டு, தனுஷை முன்னிலைப்படுத்தி வட சென்னையில் 2-ம் பாகத்தை இயக்குகிறாராம் வெற்றி மாறன். 

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close