அமலா பாலுக்கு 2-வது திருமணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 01 Nov, 2018 05:49 pm

amala-paul-s-2nd-marriage

மலையாள இறக்குமதியான நடிகை அமலா பால் முதல் கணவரான இயக்குநர் ஏ.எல்.விஜயை விவகாரத்து செய்த பின் இப்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.  

மைனாவாக அறிமுகமாகி திரைத்துரையில் மின்னிய அமலா பால் தனது 24 வயதில் இயக்குநர் விஜயை திருமணம் செய்தார். இயக்குநர் விஜய் தேனிலவுக்கு வாங்கிய பைனான்ஸ் முடிவதற்குள் விவகாரத்து வாங்கிக் கொண்டு புண்ணியவதி டாட்டா காட்டி விட்டார். ஹீரோயின்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டால், கட்டாய ரிட்டையர்மென்ட் கொடுத்துவிடும் சினிமாவுலகம். தப்பிப்பிழைக்கும் சிலருக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களை கொடுத்து நிரப்பிவிடுவார்கள். அந்த பார்முலாவையெல்லாம் லெப்ட் ரைட்டு வாங்கிய அமலாபால் மீண்டும்  தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார். இப்போது பாலிவுட்டிலும் இறக்குமதியாக தயாராகி விட்டார். ஆடை படத்தில் அவர் கொடுத்த பிகினி போஸ் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

27 வயதாகும் அமலா பால் இப்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். ’’நானாக முடிவெடுத்த எனது முதல் திருமணம் சரியாக அமையவில்லை. ஆகையால், எனது இரண்டாவது திருமணம் பற்றி முடிவெடுப்பதை எனது தாய் தந்தையின் முடிவுக்கே விட்டுவிட்டேன். தனது பிள்ளைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பதில் அவர்களுக்கு இல்லாத அக்கறையா? ஆகையால், அவர்கள் சொல்லும் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், அமலா பாலின் பால்ய சிநேகிதர் ஒருவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.