கர்ப்பமாக இருக்கிறாரா காயத்ரி?

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 11:16 am
is-gayathri-raghuram-pregnant

நடன இயக்குநர், நடிகை என எப்போதோ வெள்ளித்திரையில் அறிமுகமான காயத்ரியை மக்கள் கவனிக்கத் தொடங்கியது என்னவோ கடந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான். அவரது கோபமும், அதிரடி பேச்சும் மக்களிடையே நெகட்டிவ் இமேஜை அவர் மீது உண்டாக்கியது. அந்த சமயத்தில் அவரை வைத்து நிறைய மீம்களும் வந்தன. 

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் காயத்ரி. காருக்குள் அமர்ந்து, தனது வயிற்றில் கை வைத்திருக்கும் காயத்ரி கர்ப்பமாக இருப்பது போல் இருக்கிறது. கூடவே அந்தப் படத்திற்கு கண்ணடிக்கும் ஸ்மைலியும், அம்மா - குழந்தை ஸ்மைலியும் 'கேப்ஷனாக' போட்டிருக்கிறார் காயத்ரி. 

ஆக, இது ரியல் கர்ப்பமா, அல்லது ஏதேனும் படத்திற்கான கெட்டப்பா என்பது பற்றி தெரியவில்லை. இருப்பினும் அந்த ஃபோட்டோவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

— Gayathri Raguramm (@gayathriraguram) November 1, 2018

2006-ல் அமெரிக்காவைச் சேர்ந்த தீபக் என்பவருடன் திருமணம் நடந்த காயத்ரிக்கு, 2008-ல் அந்த வாழ்க்கை முடிவுக்கு வந்தது குறிப்பிடத் தக்கது... 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close