அக்னிச் சிறகுகளான விஜய் ஆண்டனி - அருண் விஜய்!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 11:48 am
kamal-haasan-unveils-powerful-title-of-vijay-antony-arun-vijay-movie

மூடர்கூடம் நவீன் தற்போது அலாவுதீனின் அற்புத கேமரா என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் படமாக்கப்பட்ட அந்த படத்தில் அவரும், நடிகை ஆனந்தியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

அலாவுதீனின் அற்புத கேமரா படபிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் ஆகியோரை முன்னணி கதாபாத்திரமாகக் கொண்டு, தனது மூன்றாவது படத்திற்கும் தயாராகி விட்டார் நவீன். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கும் அந்த படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர், ஜெகபதிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

இந்நிலையில் இதன் டைட்டில் லுக் தற்போது வெளியாகியிருக்கிறது. 'அக்னிச் சிறகுகள்' எனப் பெயரிடப் பட்டிருக்கும் இதன் டைட்டில் போஸ்டரை, நடிகர் கமல்ஹாஸன் வெளியிட்டுள்ளார். இந்த டைட்டில் படத்தின் மீதான ஆர்வத்தை எகிற வைத்திருக்கிறது. 
newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close