ரசிகர்களுக்கு சிம்பு தரும் தீபாவளி ட்ரீட்!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 12:10 pm
simbu-s-new-movie-title-and-first-look-date-announced

தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘அட்டாரிண்டிகி தாரேடி’. இதனை தற்போது தமிழில் ரீமேக்கிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் சுந்தர் சி. தெலுங்கில் இந்தத் திரைப்படத்தை திரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கியிருந்தார். 

இதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ கைப்பற்றி, சுந்தர் சி-யின் மூலம் இயக்கி வருகிறது. இதில் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார்.

சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். அதோடு கேத்ரின் தெரெஸா, ரம்யா கிருஷ்ணன், மஹத், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 

— Lyca Productions (@LycaProductions) November 1, 2018

இந்நிலையில் இதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தீபாவாளியன்று வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close