இனி நடிகர்களுடன் 'நோ' செல்ஃபி: சிவகுமார் சார்பில் ராகுலுக்கு புதிய செல்போன்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 12:11 pm
student-rahul-gets-new-cellphone-from-actor-sivakumar

இனி எந்த நடிகர்களுடனும் செல்ஃபி எடுக்கப்போவதில்லை என்று சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற மாணவர் ராகுல் தெரிவித்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு விழாவிற்கு வருகை தந்த நடிகர் சிவக்குமார், அந்தக் கூட்டத்தில் ஒரு இளைஞன் செல்ஃபி எடுத்ததைப் பார்த்து ஃபோனை தட்டி விட்டார். இவர் செயல் குறித்து பலதரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனைவரிடமும் தன் செயலுக்காக வருத்தம் தெரிவித்தார்.

இதன் விளைவாக, அக்டோபர் 28ம் தேதி மதுரை ஐஸ்வர்யா மகப்பேறு மருத்துவமணை திறப்பு விழா நிகழ்ச்சியில், நடிகர் சிவக்குமார் இளைஞர் ராகுலுக்கு கீழே விழுந்த மொபைல் ஃபோனுக்கு பதிலாக சுமார் ரூ.21,000 மதிப்புள்ள புதிய ஃபோனை அளித்துள்ளார். நடிகர் சிவக்குமார் சார்பாக அந்த இளைஞனுக்கு நேரில் வழங்கப்பட்டது.

அதுகுறித்து ராகுல் கூறியதாவது, "நடிகர் சிவக்குமார் அவர்கள் எனக்கு புது ஃபோன் வாங்கிக் கொடுத்தார். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். சிவகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி. மேலும் இனி எந்த நடிகருடன் செல்ஃபி எடுக்கப்போவதில்லை" என்றார். 

newstm.in

  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close