மாரி - 2 படத்தின் தரலோக்கல் ஃபர்ஸ்ட் லுக்!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 12:15 pm
maari-2-first-look-poster

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் பாலாஜி மோகனின் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதில் காஜல் அகர்வால், விஜய் ஜேசுதாஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத்தின் இசையில் அமைந்த பாடல்கள் பட்டையைக் கிளப்பின. 

தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வாருகிறது. முதல் பாகத்தில் நடித்த தனுஷே இதில் நடிக்க, ஹீரோயின் மட்டும் மாறி இருக்கிறார். ஆம்! சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். 

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மாரி 2 படத்தின் படபிடிப்புப் பணிகள் சில மாதங்களுக்கு முன்னரே நிறைவுற்று, தற்போது இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

— Balaji Mohan (@directormbalaji) November 2, 2018

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இதில் கை, கழுத்தில் சங்கிலிகளுடன் தர லோக்கல் தாதா லுக்கில் தனுஷ் காட்சியளிக்கிறார். அதோடு இந்தப் படம் வரும் டிசம்பரில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close