#MeToo நானா வெளியே... ராணா உள்ளே...!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 02 Nov, 2018 12:20 pm
metoo-rana-daggubati-replaces-nana-patekar

மீ டூ விவகாரத்தில் சிக்கியதால் ஹவுஸ்ஃபு-4 படத்தில் நடிக்க இருந்த நானா படேகரை நீக்கி விட்டு ராணா டகுபதி புதிதாக ஒப்பந்தம் செய்ய்யப்பட்டுள்ளார். 

காலா  உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது தானுஸ்ரீ தத்தா மீ டூ வில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இதனால், மைல்லைட்டில் இருந்த நானா படேகரின் திரை வாழ்வில் இருள் சூழத் தொடங்கி இருக்கிறது. ஃபர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்திப்படமான ஹவுஸ் ஃபுல்-4 படத்தில் நடிக்க இருந்த நானா படேகர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பாகுபலி படத்தில் நடித்த தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஒப்பந்தமாகி உள்ளார். 

அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் க்ரிடி சனோன், பாபி தியோல், அதியா ஷெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த மாற்றத்திற்கு தயாரிப்பாளர் சஷித் கான் எடுத்த முடிவே காரணம் எனக் கூறப்படுகிறது. ராணா டகுபதி தற்போது தெலுங்கில் என்.டி.ஆருடன் ஒரு படம், தமிழில் மடைதிறந்து உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். 

தனுஸ்ரீ வெளிப்படையாக தனது அனுபவத்தை MeToo வில் பகிர்ந்த பின்னர் பல பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. MeToo  விவகாரத்தால் இன்னும் யார், யாரது வாய்ப்புகள் பறிபோகப்போகிறதோ என்கிற கவலையில் இருக்கிறார்கள் சினிமாத்துறையினர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close