ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் அறிவிப்பு!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 01:08 pm
hip-hop-aathi-s-next-with-sundar-c

‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் கவனிக்கப்பட்டவர் ஆதி. தொடர்ந்து இசையமைப்பாளரான அவர், மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். இதனை அவ்னி மூவிஸ் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்திருந்தார். 

இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் இரண்டாவது படத்தையும், அவ்னி மூவிஸே தயாரிக்கிறது. இதனை மான் கராத்தே, ரெமோ ஆகிய திரைப்படங்களில், இணை இயக்குநராக பணியாற்றிய டி.பார்த்திபன் இந்தப் படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோயினாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். 

ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, உருவாகி வரும் இந்தப் படம் பல ஊர்களில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதன் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டதாம். விளையாட்டை தவிர, நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறதாம்.

இன்னும் பெயரிடப் படாத இந்தப் படம் அடுத்தாண்டு ஆரம்பத்தில் திரைக்கு வருவிருக்கிறதாம்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close