சர்கார் விவகாரத்தில் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படவில்லை: பதவி விலகிய பாக்யராஜ் !

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 08:11 pm
bhakyaraj-clarifies-about-reason-for-his-resignation

ஏ.ஆர்.முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் உடன்படவில்லை என்பதால் தான் சர்கார் கதையை கூறினேன், அதற்கு பின் எனக்கு நிறைய நெருக்கடி வந்தது என்று திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 

சர்கார் படத்தின் கரு வருண் ராஜேந்திரன் என்பவருடையது என்ற விவகாரத்தில் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் முன்னின்று இருதரப்பிற்கும் சமரசம் ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால், அந்த படத்தின் இயக்குநர் முருகதாஸ் அதற்கு உடன்படாததால் வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தை நாடினார். 

இதனையடுத்து, சர்கார், வருண் ராஜேந்திரன் கதை தான் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த பிரச்னை சமரசத்தில் முடிந்தது. இதனையடுத்து வீடியோ வெளியிட்ட முருகதாஸ், "சர்கார் கதை என்னுடையது தான்" என்று மீண்டும் பல்டி அடித்தார். 

இந்நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்த கே.பாக்யராஜ் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். தனக்கு இந்த விவகாரத்திற்கு பிறகு ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக தான் பதவி விலகினேன் என்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தான் பலமுறை கெஞ்சியும் முருகதாஸ் உடன்படவில்லை. அதனால் தான் சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தின் பெரிய படமான சர்கார் கதையை வெளியே கூறினேன். இது தவறு என்று உணர்ந்து தயாரிப்பு நிறுவனத்திடம் மன்னிப்பு கேட்டுவிட்டேன்" என்றும் தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close