ரசிகர்களுக்கு விஜய்யின் வேண்டுகோள்!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 03:05 pm
vijay-s-important-request-to-his-fans

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். 

தீபாவளி விருந்தாக 6-ம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

இந்நிலையில், தனது ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார் விஜய். அதாவது சர்கார் ரிலீஸின் போது, கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் எனவும், அப்படி வீணாகும் பாலை, ஏழை எளியோருக்குக் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விஷயத்தை காமெடி நடிகரும், விஜய்யின் நண்பருமான பாலாஜி, வீடியோவின் மூலம் ரசிகர்களிடத்தில் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் இந்த வேண்டுகோளை ரசிகர்கள் ஏற்பார்கள் என நம்புவோம்!

newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close