விக்னேஷ்சிவன் படத்தில் நடிக்க விரும்பும் பாலிவுட் பிரபலம்!

  திஷா   | Last Modified : 02 Nov, 2018 03:34 pm
bollywood-actor-wants-to-work-with-vignesh-shivan

பாம்பே வெல்வெட், ராஸி, லஸ்ட் ஸ்டோரிஸ், சஞ்சு,  மன்மர்ஸியான் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல். தனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை நேர்த்தியாக செய்து முடிக்கும் பிரபலங்களுள் இவரும் முக்கியமானவர். 

தற்போது விக்கியுடன், இயக்குநர் விக்னேஷ் சிவன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து, "ஆஸமான விக்கியுன் அவரின் ரசிகன், இவரின் நடிப்புக்காகவே, இவர் நடித்த அத்தனைப் படங்களையும் பிடிக்கும்" என தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்

"இன்று உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, உங்களுடன் இணைந்து பணியாற்றுவேன் என நம்புகிறேன்" என அதற்கு பதிலளித்து, ரீட்வீட் செய்திருந்தார் விக்கி. 

"அப்படியென்றால் அந்த நாள் என் வாழ்வின் மிக ஸ்பெஷலான நாள். விரைவில் உங்களுடன் பணியாற்ற பதற்றத்துடன் காத்திருக்கிறேன்" என விக்கி கெளஷலின் ட்வீட்டுக்கு, பதிலளத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். 

பாலிவுட் பிரபலங்களின் கவனம், தென்னிந்திய சினிமாக்கள் மீது திரும்பியிருக்கும் நிலையில், விக்கி கெளஷல் தமிழில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.    

newstm.in


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close