இந்தியாவில் இசை விருந்து: உறுதி செய்தார் ஏ.ஆர்.ரகுமான்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 04:07 pm
arr-tweets-about-concerts-in-india

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் விரைவில் இந்தியாவில் இசைக்கச்சேரி நடத்த இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 

உலகளவில் தமிழகத்தின் பெருமையாக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். இந்திய திரைப்படங்களையும் தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார். மேலும் சர்வதேச கலைஞர்களுடன் இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். 

இந்நிலையில் அவரின் இந்திய இசை நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 

 

 

அதில் நீண்ட நாட்களாக இந்தியாவில் எனது கச்சேரி குறித்து கேட்டவர்கள் தயாராக இருங்கள் என்று கூறியிருக்கிறார். இந்த கச்சேரியை வோனமோர் மீடியா எனும் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி பெங்களூருவில் நடக்கயிருக்கிறது என்றும் கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close