முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்கும் யுவன்!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 06:24 pm
yuvan-to-compose-for-sk-movie

இசையமைப்பளார் யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக நடிகர் சிவகார்திகேயனுக்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தை இரும்புத்திரை படத்தின் இயக்குநர் மித்ரன் இயக்குகிறார். 

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்யவுள்ளார். மேலும் ஜார்ஜ் ஒலிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

மேலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்தபடத்தின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்க இருக்கிறார். சிவகார்த்திகேயனின் 15வது படமாக இது உருவாக உள்ளது. இதுகுறித்து இதனைய தாயரிக்கும் 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close