அமிதாப் பச்சனுக்கு வக்கீல் நோட்டீஸ்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 09:25 am
legal-notice-for-amitabh-bachan

இந்தியாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி வாங்காமல், வக்கீல் உடை அணிந்து, விளம்பரத்தில் நடித்தற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்திய சினிமாவின் மிக முக்கிய பிரபலமான நடிகர் அமிதாப் பசான், வெள்ளித்திரை மற்றும் விளம்பரங்கள் என 76 வயதிலும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் எவரெஸ்ட் மசாலா நிறுவனத்தின் விளம்பரத்தில், வழக்கறிஞர் போல் உடையணிந்து நடித்துள்ளார்.

உரிய அனுமதி பெறாமல், வழக்கறிஞர் போல் உடையணிந்து நடித்ததற்காக விளக்கம் கேட்டு, அமிதாப்பச்சனுக்கும், அந்த விளம்பரத்தை ஒளிபரப்பியதற்காக, டி.வி சேனல்களுக்கும், டெல்லி வழக்கறிஞர்கள் சங்கம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது; 

"விளம்பரத்தில், வழக்கறிஞர் உடையை பயன்படுத்த, எந்தவிதமான அனுமதியும் பெறப்படவில்லை. அதனால், இந்த விளம்பரம் ஒளிபரப்பாவதை நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில், விளம்பரங்களில், வழக்கறிஞர் உடை பயன்படுத்தப்பட மாட்டாது என, உறுதியளிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை, 10 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம்" என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close