2.0 விழாக்கோலம் பூண்ட சத்யம் திரையரங்கு!

  திஷா   | Last Modified : 03 Nov, 2018 01:05 pm
2-0-trailer-launch-at-sathyam-theater

நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியிருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘2.0’. இரண்டாண்டுகளுக்கு மேல் இந்தப் படம் தயாரிப்பில் உள்ளது. இதனை ‘லைகா புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். 

 இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா சத்யம் திரையங்கில் தொடங்கியது. ஏமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் இத்திரைப்படம் உருவாகியுள்ளதால், இந்திய மீடியாக்கள் யாவும் சத்யம் திரையங்கில் குவிந்திருக்கிறார்கள். ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களுக்கு பலூன் கொடுத்து வரவேற்கப்பட்டது. 

அதோடு, ட்ரைலரை காண்போருக்கு 3டி கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் ட்ரைலர் இன்று பகல் 12 மணிக்கு இந்த 2.0 ட்ரைலர் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close