சின்ட்ரெல்லாவாகும் ராய் லட்சுமி!

  திஷா   | Last Modified : 03 Nov, 2018 11:42 am

raai-lakshmi-s-next-movie

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இடம்பெற்ற ஹர ஹர மகாதேவகி பாடலுக்குப் பிறகு ராய் லட்சுமியை பார்க்க முடியவில்லை. சினிமாவுக்கு முழுக்குப் போட்டு விட்டாரோ என நினைக்க வேண்டாம், தற்போது யார், நீயா 2 ஆகிய தமிழ் படங்கள், மேலும் 2 மலையாளம், 2 தெலுங்கு, ஒரு கன்னட படம் ஆகியவற்றில் பரபரப்பாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் மேலும் ஒரு தமிழ் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ராய் லட்சுமி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்குகிறார். இவர் ‘இசை' படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். படத்திற்கு சின்ட்ரெல்லா எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

அஸ்வமித்ரா இசையமைத்து வரும் சின்ட்ரெல்லா படத்திற்கு, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்' என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஹாரர் ஃபேண்டஸி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் விபரங்களை ட்விட்டரில் பகிர்ந்த, ராய் லட்சுமி, இந்த நவம்பர் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்
newstm.in


 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.