கேரளாவில் மாஸ் காட்டும் தளபதி: விஜய்க்காக உருவாக்கப்பட்ட 175 அடி உயர கட் அவுட்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:21 pm

huge-cut-outs-to-24-hour-screening-vijay-s-sarkar-frenzy-peaks

இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டை நடிகர் விஜய்க்காக அவரது ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர். 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இதற்காக அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

 தமிழகத்தை போல கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றமான கொல்லம் நண்பன்ஸ், இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட்-அவுட்டை நடிகர் விஜய்க்காக உருவாக்கி உள்ளனர். இந்த கட்-அவுட்டின் உயரம் 175 அடி எனக் கூறப்படுகிறது.இந்த கட் அவுட் நேற்று மாலை திறக்கப்பட்டது. இதனை மலையாள நடிகர் சன்னி வைன் திறந்து வைக்கிறார். மேலும் இந்த திறப்பு விழாவில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாகவும் கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.