சன் டிவியில் ’96’ படம் ஒளிபரப்பாதீங்க! த்ரிஷா வேண்டுகோள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:13 pm
trisha-tweet-about-96

தீபாவளி பண்டிகையையொட்டி சன் டிவியில் 96 படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என நடிகை த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து கடந்தமாதம் வெளியான படம் 96. காலங்கள் கடந்த காதல் காவியங்களை திரைகளில் காட்டிய இந்த 96 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் தற்போதுவரை திரையரங்குகளில் ஓடி வெற்றிநடை போட்டுவருகிறது. 

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சன் டிவியில் இந்தப் படம் ஒளிபரப்பாகவுள்ளது என சன் டிவியில் ப்ரோமோ வெளியிடப்பட்டிருந்தது. இது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சன் டிவியில் 96 படத்தை ஒளிபரப்ப வேண்டாம் என நடிகை த்ரிஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

— Trish Krish (@trishtrashers) November 3, 2018

 

இதுகுறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “96 படம் வெளியாகி இது 5-வது வாரம். இப்போதும் 96 படத்தை காண 80 சதவீதம் பேர் திரையரங்கிற்கு வருகிறார்கள். இந்நிலையில் 96 படத்தை இவ்வளவு சீக்கிரம் டிவியில் ஒளிபரப்பாவது நியாயமில்லை. 96 பட ஒளிபரப்பை பொங்கலுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என சன் டிவியை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளார். 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close