லேட்டா வந்தாலும் கரைக்ட்டா வரணும்; வந்து சரியா அடிக்கனும்!: ரஜினிகாந்த் மாஸ் பேச்சு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Nov, 2018 06:53 pm
rajinikanth-speech

லேட்டானாலும் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு கரெக்ட்டாக வர வேண்டும் என்று 2.0 திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் ரஜினியின் 2.0 திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக் ஷய்குமார், ஆஸ்கர் விருதுபெற்ற ஒலிக்கலவையாளர் ரசூல் பூக்குட்டி, இயக்குநர் ஷங்கர், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை எமி ஜாக்சன், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு டிரெய்லரை வெளியிட்டனர்.

விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ 2.0 திரைப்படத்திற்கு இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாகத் தெரிவித்தார். டிரெய்லர் வந்தாச்சு, வெற்றி உறுதியாகிடுச்சு, ஹிட்டாக்க வேண்டியது தான் பாக்கி, மக்கள் முடிவு பண்ணிட்டாங்க. ஹிட்டாகிடும்... லேட்டாக வந்தாலும் கூட கரெக்டாக வர வேண்டும் என்றும் வந்து சரியாக அடிக்க வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்தார். ஷங்கரின் படைப்புத்திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ரோபோ போன்ற பாடிசூட் எனும் உடையை அணிந்து நடிப்பதில் தனக்கு சிக்கல் ஏற்பட்டது. உடல்நிலை சரியில்லாததால் படத்தில் இருந்து விலக முடிவெடுத்தேன். ஆனால் சங்கர்தான் என்னை சமாதானப்படுத்தினேன்” என்று கூறினார். 

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close