இவர்களுடன் சகஜமாக நடிப்பேன்: சக நடிகர்களை பற்றி ஜோதிகா

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 03:19 pm
jyothika-reveals-her-comfortable-heros

நடிகர்கள் சூர்யா, அஜித், மாதவனோடு சகஜமாக நடிப்பேன் என்றும் அதற்கு பிறகு விதார்த்தோடு அப்படி நடித்திருப்பதாகவும் காற்றின் மொழி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகை ஜோதிகா தெரிவித்தார். 

கடந்த ஆண்டு  இந்தியில் வெளியான ’துமாரி சுலு’ படத்தை இயக்குநர் ராதாமோகன் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்.  இந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் ராதாமோகன் 'காற்றின் மொழி' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்தியில் வித்யாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா நடித்துள்ளார். ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்துள்ளார்.

நவம்பர் 16ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பேசிய நடிகை ஜோதிகா, "மொழி படத்திற்க்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து இயக்குனர் ராதா மோகனுடன் பணிபுரிவது மகிழ்ச்சியளிக்கிறது.நான்ன் நடிக்கும் அனைத்து படங்களும் சிவக்குமாருக்கு பிடிக்கும். வீட்டில் அவர்தான் தனக்கு பக்கபலமாக இருக்கிறார். கமல்ஹாசன் நடிக்கும் போது மெய் மறந்து பார்த்துக்கொண்டே இருப்பேன் அப்படித்தான் எம்.எஸ் பாஸ்கரின் நடிப்பும் இந்தப் படத்தில் இருந்தது.

எல்லா நடிகர்கள் உடனும் சகஜமாக நடித்துவிட முடியாது, நடிகர் சூர்யா, அஜித், மாதவனை அடுத்து வித்தார்த்துடன் சகஜமாக நடிக்க முடிந்தது" அவர் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close