தனுஷுக்கு கணக்குப்போட்ட லட்சுமி மேனன்..!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 04 Nov, 2018 06:28 pm
lakshmi-menon-with-dhanush

‘கும்கி’ படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன்தான் ஒரு காலத்தில் தமிழ்சினிமாவின் ராசியான ஹீரோயின்.

அவர் படத்தில் இருந்தாலே போதும். அந்தப்படம் ஹிட் என்றெல்லாம் ஜால்ரா அடித்த ரசிகர்களை, கால்ரா வரவழைக்காத குறையாக மிரட்டிவிட்டது அவரது தப்பு தப்பான தேர்வுகள். அளவுக்கு அதிகமாக வெயிட் போடவும் செய்தார். விளைவு...? கேரளாவுலேர்ந்து இங்க வந்து ஏன்மா கஷ்டப்படுறீங்க? அங்கேயே தொழிலை பாருங்க என்று அனுப்பிவிட்டார்கள். அடுத்து ’’ராட்சன் படத்தை இயக்கிய ராம்குமார் அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அதில்தான் தனுஷின் சிபாரிசின் பேரில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் லட்சுமி’’ என வதந்திகள் பரவின.

இது குறித்து ராம்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இப்போது தான் இந்தப்படத்தின் ஆரம்ப கட்டத்தை தொடர்ந்திருக்கிறோம். இன்னும் கதாநாயகியை தேர்வு செய்யவில்லை’ என தெளிவுபடுத்தினார். சரி எப்படி கிளம்பியது இந்த வதந்தி. லட்சுமி மேனன் தான் இதற்கும் காரணம் என்கிறார்கள். எப்படியாவது மீண்டும் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருக்கும் அவர், லைம்லைட்டில் இருக்கும் தனுஷ் படத்தில் நடிக்க இருப்பதாக, சில பத்திரிக்கையாளர்களை அவரே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

அதன் மூலம் மீண்டும் மீடியாக்களின் கவனம் பெற்று மீண்டும் ஹீரோயினாக வலம் வரலாம் என்பது அவர் போட்ட கணக்கு... இந்த ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால், விடை வருமா..?   

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close