முறுக்கும் சர்கார்... 2.O வை கிறுகிறுக்க வைக்கும் ‘ஜீரோ’!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 05 Nov, 2018 12:30 pm
twisted-sarkar-2-o-zero-that-makes-you-cry

இந்திய சினிமாவில் 600 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள முதல் பிரமாண்டமான படைப்பாக பெருமை கொள்ளும் 2.O படம் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யுமா? என்கிற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. 

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு தற்போது 600 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என ரஜினிகாந்த் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள். இவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தின் டீசர், ட்ரெய்லர் சாதனையைப் படைக்காமலிருப்பது ரஜினிகாந்த் ரசிகர்களிடம் மட்டுமல்ல, படக்குழுவினரிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.பாகுபலி 2 படத்தின் ட்ரெய்லர் ஏற்படுத்திய சாதனையைக்கூட 2.O ட்ரெய்லர் ஏற்படுத்தவில்லை. அதைவிட செலவு குறைவில் எடுக்கப்பட்ட படங்களின் டீசர், ட்ரெய்லர்கள் பெரிய சாதனைகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. 

தமிழில் சர்கார் டீசர் ஏற்படுத்திய சாதனையை 2.O பட டீசர், ட்ரெய்லரால் முறியடிக்க முடியவில்லை. 2.O ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் தமிழில் 77 லட்சம் பார்வைகளையும், தெலுங்கில் 35 லட்சம் பார்வைகளையும், இந்தியில் 1 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.
இதற்குக் காரணம் 2.O ட்ரெய்லருக்குப் போட்டியாக ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ ட்ரெய்லர் அமைந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 6 கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

டிரென்டிங்கிலும் ஜீரோ படத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்தான் 2.O உள்ளது. இந்தி ஹீரோவான அக்‌ஷய் குமார் நடித்திருந்தும், இந்தியாவின் சூப்பர் ஸ்டார், ஆசியக் கண்டத்தில் அதிக சம்பளம் வாங்குபவர் என குறிப்பிடப்படும் ரஜினிகாந்த் நடித்திருந்தும் ஷாருக் கான் படத்துக்குப் பிறகே அவரது படம் உள்ளது. ட்ரெய்லருக்கு இவ்வளவுதான் வரவேற்பு என்றால் படத்துக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் எனப் படக்குழு கவலையில் ஆழ்ந்துள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close