மிரட்டும் தமிழ்ராக்கர்ஸ்: தீபாவளிக்கு சர்கார் ஹெச்.டி பிரிண்ட்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 02:29 pm
tamil-rockers-tweet

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் ஹெச்.டி பிரிண்ட்டை தீபாவளி அன்று இணையத்தில் வெளியிட இருப்பதாக தமிழ்ராக்கர்ஸ் ட்வீட் செய்திருக்கிறது. 

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், 3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டார். இணையதளங்கள் சர்கார் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் படத்தின் ஹெச்.டி பிரிண்டை விரைவில் வெளியிடுவோம் என்று படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளனர்.  இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close