செம ஸ்டைலாக இருக்கும் தேவ் பட டீசர்!

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2018 03:18 pm

dev-teaser-released

ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் தேவ் படத்தின் டீசர் இன்று வெளியானது. 

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் 'தேவ்'. இதனை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

பிக்ச்சர்ஸ் S. லட்சுமண் இதனை தயாரித்து வருகிறார். படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இந்தப் படத்திற்காக குலு மணாலி சென்றிருந்த போது, அங்கு பெய்த கனமழை மற்றும் பெரும் வெள்ளம் காரணங்களால், படப்பிடிப்பு நடத்த முடியாமல் தேவ் குழுவினர் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

 

 

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இதன் டீசரையும் சூர்யா இன்று வெளியிட்டுள்ளார். செம கலர்ஃபுல்லாகவும், ஸ்டைலாகவும் இருக்கும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.