வந்தா ராஜாவா தான் வருவேன்: சிம்பு-சுந்தர்.சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 10:07 am
sundar-c-simbhu-movie-first-look

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் சுந்தர் இயக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் சூப்பர் ஹிட்டான அத்திரண்டிகி தாரேதி படத்தின் தமிழ் ரீமேக் தற்போது உருவாகி வருகிறது. இயக்குநர் சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். மேலும் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மஹத் ராகவேந்திரா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு இன்று வெளியாகும் என்று முன்னரே அறிவிக்ப்பட்டு இருந்தது. அந்த வகையில் தயாரிப்பு நிறுவனமான லைகா இதனை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு வந்தா ராஜாவா தான் வரு
வேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் பொங்கல் திருநாளன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close