இன்று மாலையே சர்கார் ஹெச்.டி பிரிண்ட்: மீண்டும் தமிழ்ராக்கர்ஸ் மிரட்டல்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 01:53 pm
tamilraockers-to-release-hd-print-tonight

சர்கார் படம் வெளியான அன்று மாலையே ஹெச்டி பிரிண்டில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள "சர்கார்" திரைப்படம் தீபாவளியையொட்டி நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் இன்று திரையிடப்பட்டது. கதை திருட்டு வழக்கு தொடர்பாக பல்வேறு தடைகளை கடந்து இப்படம் வெளியானது.

"சர்கார்" படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சார்பில் தகவல் வெளியான நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கம், படக்குழுவினர் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினர்.

 

 

இந்நிலையில், `சர்கார்' திரைப்படம் இன்று மாலையே ஹெச்.டி பிரிண்டில் இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சவால் விடுத்திருப்பது படக்குழுவினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close