பிரபுதேவா நடிக்கும் தேள் ஃபர்ஸ்ட் லுக்

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 12:26 pm
prabhu-deva-s-thael-first-look-released

ஹரிகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் தேள் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியானது.

நடிகர் பிரபு தேவா தற்போது “சார்லி சாப்ளின் 2″,”தேவி 2” போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஹரிகுமார் இயக்கி வரும் தேள் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட பிக் பாஸ் போட்டியாளரான சம்யுக்தா ஹெக்டே என்ற 18 வயது இளம் நடிகை கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி திருநாளான இன்று வெளியாகி உள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற வரும் நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close