யுவன் இசைக்கோலம் எழுதியிருக்கிறார்: கண்ணே கலைமானே படத்தை பாராட்டிய வைரமுத்து

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 12:47 pm
vairamuthu-about-kanne-kalaimane

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள கண்ணே கலைமானே திரைப்படத்தை வைரமுத்து பாராட்டி பதிவிட்டுள்ளார்.

தர்மதுரை படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் சீனு ராமசமி உதயநிதி ஸ்டாலினைக் கதாநாயகனாக வைத்து கண்ணே கலைமானேப் படத்தை இயக்கி உள்ளார். தர்மதுரையின் இசைக்கூட்டணிக்குப் பரவலான பாராட்டுகளோடு தேசிய விருதும் கிடைத்ததால் இந்த படத்திலும் யுவன் ஷங்கர் ராஜா-வைரமுத்து கூட்டணியே பாடல் உருவாக்கி உள்ளனர்.

விவசாயப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில்  படத்தை பார்த்த கவிஞர் வைரமுத்து பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

 

அதில், "சீனுராமசாமி உதயநிதியை உன்னத நடிகராக உயர்த்தியிருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜா இசைக்கோலம் எழுதியிருக்கிறார்.
வளருங்கள் தம்பிகளே! வாழ்த்துக்கள்!

ரசிகர்களின் பார்வைக்காக ஒரு காதல் பாடல்.
*
எந்தன் கண்களைக் காணோம்
அவள் கண்களில் கண்களைத்
தொலைத்தேனா?

நேரில் வந்தாள் – ஏன் என்
நெஞ்சில் வந்தாள்? – உயிர்க்
கூட்டுக்குள் புகுந்து
பூட்டிக் கொண்டாள்
எவ்வாறு மறப்பது – உயிர்
மரிப்பது நன்று
*
காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால் – இந்தக்
கலகப் பூச்சிகள் பிறப்பது ஏது?

சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால் – பட்சி
விலங்கு ஜாதிக்கு ஜாதகம் ஏது?

கல்யாணம் தானே
காதலின் எதிரியென்றால்
கல்யாணம் தேவையா?"

என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close