சர்கார் பட டைட்டிலில் வருண் ராஜேந்திரன்!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 12:51 pm

sarkar-ttitle-letter-about-varun-rajendran

விஜய் நடித்துள்ள சர்கார் படம் இன்று வெளியானதையொட்டி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியது போல், பட டைட்டிலில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ள "சர்கார்" திரைப்படம் தீபாவளியையொட்டி இன்று நாடு முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

சர்கார் கதைக்கும், செங்கோல் கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, கதையின் கரு ஒத்து போனதே தவிர மற்றபடி, சர்கார் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்தும் நான் தான் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியானதையடுத்து, தன்னுடைய கதை திருடி ஏ.ஆர்.முருகதாஸ் 'சர்கார்' என்ற படத்தை எடுத்துள்ளதாக  வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இரு தரப்பினரும் சமரசத்திற்கு வந்தனர். இறுதியில் 'சர்கார்' படத்தில் வருண் ராஜேந்திரனின் பெயர் போட்டு நன்றி தெரிவிக்கப்படும் என ஏ.ஆர்.முருகதாஸ் நீதிமன்றத்தில் கூறியதையடுத்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது. சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இந்த விவகாரத்தில் பாக்கியராஜும் மிகவும் மெனக்கட்டு சமரசத்திற்கு கொண்டு வந்தார் என்றே கூறலாம்.

எனவே இந்த விவகாரத்தில் முடிவுக்கு வந்ததுபோல், சர்கார் பட டைட்டில் கார்டில், "தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான வாக்கை கள்ள ஓட்டாக அடுத்தவன் போடுவது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்த்து, தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி ‘சர்கார்’ என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன்.

இதே கற்பனைக் ‘கரு’ ஒரு உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் உதித்தது. எனக்கு முன்பே எங்களது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதே கருவை அவரும் சிந்தித்து எனக்கு முன்பே பதிவு செய்திருந்தபடியால் வளர்ந்து வரும் உதவி இயக்குநர் வருண் என்கிற ராஜேந்திரனை பாராட்டி, அவர் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில், இதை பதிவு செய்து ஊக்குவிக்கிறேன். திறமையுள்ள ஒரு சக உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.