விக்ரம் - கமல்ஹாசன் இணையும் 'கடாரம் கொண்டான்'- பர்ஸ்ட் லுக் இதோ!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 07:26 pm
kadaramkondan-fl

நடிகர் விக்ரம் உடன் கமல்ஹாசன் நடிப்பில் அக்ஷராஹாசன் இணைந்து நடிக்கும் சீயான் 56 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சாமி ஸ்கொயர் திரைப்படத்துக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் டிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க விக்ரம் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்க உள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது. 

அதன் படி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சீயான் 56 என அழைக்கப்பட்ட படத்துக்கு கடாரம் கொண்டான் என பெயரிடப்பட்டுள்ளது.  இதனை நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close