பாகுபலி, காலா சாதனைகளை முறியடித்தது சர்கார்!

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 06:09 pm
sarkar-beats-bahubali-and-kaala-records

தீபாவளி ரிலீசான நடிகர் விஜய்யின் சர்கார், முதல் நாளிலேயே பல்வேறு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடித்து கலக்கியுள்ளது. சர்வதேச அளவில் முதல் நாளில் அதிகம் வசூலித்த தமிழ் படம் என்ற சாதனையை சர்கார் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

விஜய், ஏ.ஆர். முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் என மெகா தலைகள் இணைந்த சர்கார், நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. செவ்வாய் கிழமை முதல் நாள் என்றாலும் கூட, படத்திற்கு எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு வரவேற்பு இருந்தது. தலைநகர் சென்னையில் மட்டும், ரூ.2.37 கோடி கலெக்ஷன் பெற்று சாதனை படைத்துள்ளது சர்கார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தின் ரூ.1.76 கோடி சாதனையை சர்கார் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழகம் மற்றும் கேரளாவில் பாகுபலி படத்தின் வசூல் சாதனைகளை சர்கார் வீழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், சர்கார் ரூ.75 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்காவில் ரூ.2.47 கோடி, ஆஸ்திரேலியாவில் ரூ.1.16 கோடி, பிரிட்டனில் ரூ.1.17 கோடி என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது சர்கார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close