சர்காரின் புதிய சாதனை! கூகுளில் அதிகம் தேடப்பட்ட 49P

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2018 06:13 pm
sarkar-effect-49p-trending-on-google

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் ரிலீசுக்கு பின், 49P என்ற தேர்தல் விதிமுறை தான் கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது என தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று நாடு முழுவதும் வெளியானது. முதல் நாளில் வசூலில் புதிய சாதனை படைத்துள்ள சர்கார் மற்றொரு சாதனையையும் படைத்த்துள்ளது. 49P தேர்தல் விதிமுறை குறித்து மக்களை அதிகம் தேட வைத்துள்ளது. சர்கார் படத்தில் பேசப்பட்டிருக்கும் கள்ள ஓட்டு தொடர்பான விஷயம் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இப்படத்தில் கார்ப்ரேட் நிறுவனத்தின் சிஇஓ-வான விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அமெரிக்காவில் இருந்து வருகிறார். அவரது ஓட்டை கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இதனால் 49P என்ற தேர்தல் விதிமுறையின்படி, அவர் மீண்டும் வாக்களிக்க கோருகிறது. அதுவும் அவருக்கு மறுக்கப்பட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்கிறார். 

தேர்தலில் ஒருவர் கள்ள ஓட்டு போடப்பட்டால், அந்த நபர் மீண்டும் வாக்களிக்கலாம் என்பதே 49P என்ற தேர்தல் விதிமுறை. இந்தப்படம் வெளியானதையடுத்து, 49P பற்றி மக்கள் அதிகம் கூகுளில் தேடியுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் சர்கார் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது என்று பரவலாக பேசப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close