புதிய சர்ச்சையை கிளப்பும் சர்கார்! ஜெயலலிதாவை சீண்டியதால் விபரீதம்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Nov, 2018 10:54 pm

sarkar-issue

‘சர்கார்’ படத்தில் அப்பாவுக்கே விஷம் வைத்துக்கொல்லும் கொடூர வில்லி பாத்திரத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டியிருந்ததுதான் அமைச்சர்  கடம்பூர் ராஜூயின் கோபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றொரு பரபரப்பான தகவல் தற்போது தீயாய்ப் பரவ ஆரம்பித்துள்ளது.

விஜய் நடித்து வெளியாகி இருக்கும் சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவள்ளி என்பதை குறிப்பிட்டு மக்கள் சமூகவலைதளங்களில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரும் கோமளவள்ளி தான் எந்த நோக்கத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘சர்கார்’ படத்தில் அப்பாவுக்கே விஷம் வைத்துக்கொல்லும் கொடூர வில்லி பாத்திரத்துக்கு ஜெயலலிதா பெயரைச் சூட்டியிருந்ததுதான் அமைச்சரின் கோபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றொரு பரபரப்பான தகவலும் வைரலாக ஆரம்பித்துள்ளது.

சர்காரில் முதல்வர் பழ. கருப்பையாவின் மகளாக கோமளவள்ளி என்ற கொடூர வில்லி கதாபாத்திரத்தில் சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்திருந்தார். இந்த கோமளவள்ளி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயராகும். வரலட்சுமி,  ஜெயலலிதா போலவே கழுத்தில் நகை எதுவும் அணியாமல், கழுத்துவரை உடை அணிந்து வடிவமைக்கப்பட்டிருந்தார்.

சர்கார் படத்தைத் தயாரித்த சன் பிக்சர்ஸ் மீதும் மற்றும் சர்கார் குழுவினர் மீதும் இன்று மதியம் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, குறிப்பிட்ட விஷயங்கள் எதையும் கூறாமல் பொத்தாம் பொதுவாகத்தான் கூறியிருந்தார்.

சற்றுமுன்னர், இந்த பஞ்சாயத்தில் தன்னையும் இணைத்துக்கொண்ட தனியரசு எம்.எல்.ஏ. ‘படத்தின் வில்லி கேரக்டருக்கு சூட்டப்பட்ட கோமளவள்ளி என்கிற பெயரை உடனே மாற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’ என்று புதிதாய் களம் இறங்கியிருக்கிறார்.

கோமளவள்ளி என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர். தமிழ் ஐயங்கார் குடும்பத்தை சேர்ந்த ஜெயராமன் வேதவள்ளி தம்பதிக்கு அவர்களின் குடும்ப வழக்கப்படி பாட்டியின் பெயரான கோமளவள்ளி சூட்டப்பட்டுள்ளது. விஜயை ஹீரோவாக காட்டும் படத்தில் கோமளவள்ளி என்ற பெயரில் வில்லி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.