விஜயின் சர்கார்... அச்சத்தில் ரஜினி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 08 Nov, 2018 01:11 pm
vijay-sarkar-rajini-in-fear

சர்கார் பிரச்சினைகளால், ஏ.ஆர்.முருகதாஸ் தரப்புக்கு சறுக்கல் ஏற்பட்டாலும், படம் ஹிட்டடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு.

அடுத்து ரஜினியை வைத்து இயக்க இருக்கிறார் முருகதாஸ்.  ரஜினியை வைத்து சன் பிக்சர்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் என்பதாலும், தற்போது உருவாகிவரும் பேட்ட படத்தை விட பெரியளவில் உருவாக வேண்டிய அவசியம் அதிகம் இருப்பதாலும் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

ரஜினிக்கும் அந்தப்படம் தனது திரை வரலாற்றில் மிக முக்கியம் என்பதில் உறுதி இருக்கிறது. ஆனால், சர்கார் கதை பிரச்சினையை தொடர்ந்து கவனித்து வந்த ரஜினி தரப்பிலிருந்து ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசப்பட்டிருக்கிறது. ‘சார் பேசச் சொன்னாங்க...’ எனத் தொடங்கிய அந்த உரையாடல், கால்ஷீட், ஷூட்டிங் நடத்த வேண்டிய இடங்கள் என நீண்டிருக்கிறது.

கடைசியில், ‘சர்கார் கதைக்கு பிரச்சினை வந்தா மாதிரி நம்ம கதைக்கும் வந்துடாதுல்ல. சார் பொலிடிகலா ஆக்டிவா இருக்க சமயம் படம் ரிலீஸாகும். அப்ப ஏதாவது பிரச்சினை வந்தா ரொம்ப கஷ்டமாகிடும்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். ‘சிரித்துக்கொண்டே அதெல்லாம் நான் பாத்துக்குறேன் சார்’ என்று சொல்லிவிட்டு அந்தத் தொடர்பை துண்டித்திருக்கிறார் முருகதாஸ். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close