அ.தி.மு.க போராட்டம் எதிரொலி; மதுரையில் சர்கார் பிற்பகல் காட்சி ரத்து!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 02:59 pm
sarkar-show-cancel-at-madurai-theatre

மதுரை சினிப்ரியா தியேட்டரில் சர்கார் பிற்பகல் 2 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அடுத்த காட்சி இருக்கும் எனவும் தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம், தீபாவளி விருந்தாக கடந்த நவம்பர் 6ல் ரிலீசானது. இப்படத்தில் தற்போதைய அ.தி.மு.க அரசு மற்றும் ஜெயலலிதா குறித்து இப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.   

எனவே இப்படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க அமைச்சர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர்  சி.வி.சண்முகம்,  தலைமை செயலகத்தில் பிற அமைச்சர்களுடன் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அதே நேரத்தில், மதுரையில் மினிப்பிரியா தியேட்டர் முன்பு அ.தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

போராட்டத்தின் போது ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், "சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் கண்டிப்பாக இந்தப்படம் எந்த தியேட்டரிலும் திரையிட அனுமதிக்க மாட்டோம். காட்சிகளை நீக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். 

மதுரையில் பிரபல தியேட்டரான சினிப்ரியா தியேட்டர் மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சர்கார் காட்சியை ரத்து செய்துள்ளோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் மற்ற தியேட்டரிலும் சர்கார் படத்தை ஓட விடமாட்டோம்" என்று தெரிவித்துள்ளார். 

இவ்வாறு ராஜன் செல்லப்பா கூறியதையடுத்து, தியேட்டர் நிர்வாகமும் இதனை உறுதி செய்துள்ளது. மதுரை சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்பிரியா ஆகிய மூன்று திரையிலும் சர்கார் பிற்பகல் 2 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அடுத்த காட்சி இருக்கும் எனவும் தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. . 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close