சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது புகார்!

  Newstm Desk   | Last Modified : 08 Nov, 2018 03:39 pm
fir-against-ar-murugadoss

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேச துரோக சட்டப்பிரிவில் நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அளித்துள்ளார். 

சர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.க போர்க்கொடி தூக்கியுள்ளது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், படம் திரையிட தடை விதித்து மதுரையில் அ.தி.மு.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அதேபோன்று தலைமை செயலகத்தில் அமைச்சர்  சி.வி.சண்முகம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இறுதியில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் தேவராஜன், இதற்கான புகாரை காவல் ஆணையரிடம் அளித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close