சர்கார் விவகாரம்: மக்களின் கேலிக்கு ஆளான அதிமுகவினர்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 04:33 pm
sarkar-social-media-trending

சர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.கவினர் நடத்தும் போராட்டம் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. 

சர்கார் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு விஜய் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றும், வேகம் குறைந்த திரைக்கதை அமைப்பால் இந்த படம் மெர்சல் அளவிற்கு பெரிய வெற்றிப்படமாக விஜய்க்கு அமையாது என்று பேசப்பட்டு வந்த நிலையில் அதிரடியாக அதிமுகவினர் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டு மக்கள் வியந்துள்ளனர். 

சர்கார் படத்தில் இடம்பெறும் தமிழக அரசியல் குறித்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், வில்லியின் பெயரை மாற்றக்கோரியும் என அ.தி.மு.கவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதிமுகவினரின் இந்த போராட்டம் நகைப்புக்கு ஆளானதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சன் பிக்சர்ஸுடன் அதிமுக ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளதா? மெர்சலுக்கு தமிழிசை, ராஜா, இந்த படத்துக்கு ஒட்டுமொத்த அதிமுகவா? "நானும் ரெளடி தான்" வடிவேல் மொமெண்ட்!

இன்னும் பல விதங்களில் சமூக வலைத் தளங்களில் கருத்து பதிவிட்டுஅதிமுகவினரை வறுத்தெடுத்தது வருகின்றனர்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close